Wednesday, February 11, 2009

25.02.2009 மாவட்ட தர்ணாக்களில் பங்கேற்கும் சங்க நிர்வாகிகள்

வ.எண். மாவட்டம் கலந்து கொள்ளும் தலைவர்
1தென்சென்னைமற்றும்வடசென்னை:க.ராஜ்குமார்,மாநிலத்தலைவர் TNGEA
2 காஞ்சிபுரம் : ந.சேகர், பொதுச்செயலாளர்,TNRDOA
3 திருவள்ளுர் டியூக்பொன்ராஜ், மாநிலத் தலைவர்,TNROA
4 கடலூர்மற்றும்விழுப்புரம்:ஆர்.பீட்டர்பர்ணபாஸ், மாநிலதுணைத்தலைவர்,TNGEA
5 வேலூர் மற்றும் திருவண்ணாமலை: பா.ரவி,மாநிலத்துணைத்தலைவர், TNGEA
6 தருமபுரிமற்றும்கிருஷ்ணகிரி :எஸ்.சிவக்குமார்,மாநில துணைத்தலைவர் , TNGEA
7 சேலம் மற்றும் நாமக்கல்: பா.அமாவாசை, மாநிலச்செயலாளர், TNGEA
8 ஈரோடு மற்றும் கோவை: இரா.முத்துசுந்தரம், பொதுச்செயலாளர், TNGEA
9 நீலகிரி ஜி.சுகுமார்,மாநிலத்தலைவர்,த.நா.ஆய்வகநுட்பனர் சங்கம்
10 கரூர் :பி.எ°.பிரசன்னா, மாநில மகளிர் துணைக்குழு, TNGEA
11 திண்டுக்கல்மற்றும்தேனி:என்.ஜெயச்சந்திரன்,மாநிலத்துணைத்தலைவர், TNGEA
12 திருச்சி மற்றும் புதுக்கோட்டை : என்.இளங்கோ, மாநிலச்செயலாளர், TNGEA
13 பெரம்பலுர் பி.லலிதா, மாநில மகளிர் துணைக்குழு, TNGEA
14 தஞ்சாவூர் ஜி.வெங்கட்ராமன், மாநிலத்தலைவர் ,TNPHDOA
15 நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் : மு.அன்பரசு, மாநிலச்செயலாளர், TNGEA
16 மதுரை : இரா.சீனிவாசன், மாநிலப்பொருளாளர், TNGEA
17 இராமநாதபுரம் கே.எம்.தியாகராஜன், பொதுச்செயலாளர், TNMDEA
18 சிவகங்கை :இரா.தமிழ்ச்செல்வி, மாநிலத் துணைத்தலைவர், TNGEA 19 விருதுநகர் மற்றும் துhத்துக்குடி:என்.குமாரவேல், மாநிலச் செயலாளர், TNGEA
20 திருநெல்வேலி : வீரபாகு, மாநிலத்தலைவர்,TNRDOA
20 கன்னியாகுமரி :ஆர்.பாலசுப்பிரமணியன், மாநிலத்துணைத்தலைவர், TNGEA
21 அரியலூர் : ஆர்.தமிழ்மணி, மாநிலத்தலைவர், TNHDEA


-பொதுச்செயலாளர். தநாஅஊச

Tuesday, February 10, 2009

‘சத்யம்’ சோதனை


எத்தனை காலம்தான் ஏ(America)மாற்றுவார்.......

தகவல் தொழில்நுட்பத் துறையில், இந்தியாவின் நான்காவது பெரிய கார்பரேட் நிறுவனமான “சத்யம் கம்ப்யூட்டர்’’- நிறுவனம் ஒரு மிகப் பெரிய மோசடியில் ஈடுபட்டு, அதன் முதலீட்டாளர்களையும், அந்நிறுவனத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மோசடி குறித்து முதலில் வெளிப்படுத்தியது வேறுயாருமல்ல, அந்நிறுவனத்தின் தலைவரான திரு. பி. இராமலிங்கராஜூ என்பவர்தான். கடந்த 8.1.09 அன்றைய நாளேடுகளில் இவரது பாவமன்னிப்பு கடிதம் தான் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தது.

செபி அமைப்பிற்கு அவர் எழுதிய அந்தக் கடிதத்தில், கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து மோசடியான வரவு-செலவுகளை முன்வைத்து சுமார் ரூபாய்.7106 கோடி வரை மோசடி செய்திருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்கு விலைகளைத் தொடர்ந்து உச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இலாபத்தை உயர்த்திக் காட்டியும் பொறுப்புகளைக் குறைத்துக் காட்டியும், இல்லாத ரொக்க இருப்பை இருப்பதாகவும், அதன் மீது பெறப்படாத வட்டியைப் பெற்றதாக காட்டியும், வரவு-செலவு அறிக்கைகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்துள்ளன. இவ்வாறு பங்குவிலையை செயற்கையாக உயரச்செய்து, தன்வசமுள்ள பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து பெருந்தொகையைச் சுருட்டி உள்ளனர். இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச்செயல் அலுவலருமான திரு. பி. இராமலிங்கராஜூ மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் 2001-ஆம் ஆண்டில் மொத்தப் பங்குகளில் 25.60 சதம் பங்குகள் இருந்துள்ளன. ஆனால் 2009 ஜனவரியில் இந்தப் பங்குகள் 5.13சதமாகக் குறைந்துள்ளன. இவ்வாறு செயற்கையாக, மோசடியாக உயர்த்தப்பட்ட விலையில் விற்கப்பட் பங்குகள் மூலமாகக் கிடைத்த பெரும் தொகையை, இக்குடும்பத்தின் மற்ற நிறுவனங்களான “மைடாஸ் இன் ஃபரா, மைடாஸ் ப்ராப்பல்டீஸ்’’ போன்றவற்றில் முதலீடு செய்து, இந்நிறுவனங்களின் பெயரில் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.

1.12.08 அன்று இந்நிறுவனப் பங்கு ஒன்றின் விலை, மும்பை பங்குச் சந்தையில் ரூ.235.85 காசுகளாக இருந்தது. 7.1.09 அன்று ரூ.39.95 காசுகளாக வீழ்ச்சியடைந்தது. இந்நிலையில் அந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்களின் கதி என்ன ? என்பதைச் சற்று கற்பனை செய்து பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது. ஆனால் இப்படிப்பட்ட பங்குச் சந்தையில்தான் நம்முடைய ஓய்வுகால சமூக உத்திரவாதமான ஓய்வூதிய நிதியை முதலீடு செய்திட மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது என்பது எரியும் நெருப்பில் வார்க்கப்படும் எணணெய் தானே

இத்தகைய பெரும் மோசடியில் ஈடுபட்ட சத்யம் நிறுவனத்திற்கு, சர்வதேச அளவில் சிறந்த கார்ப்பரேட் நிறுவன நிர்வாகத்திற்காக வழங்கப்பட்டக்கூடிய “தங்கமயில்’’ விருது வழங்கப்பட்டுள்ளது. சத்யம் நிறுவன குடும்பத்திற்குச் சொந்தமான “மைடாஸ் இன்ஃப்ரா’’ நிறுவனத்திற்கும்,
குடும்பத்திற்குச் சொந்தமான “மைடாஸ் இன்ஃப்ரா’’ நிறுவனத்திற்கும், ஆந்திரப்பிரதேச மாநில அரசு, ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மசூலிப் பட்டிணம் துறைமுகத் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கான ஒப்பந்தங்களும், பல ஆயிரக்காணக்கான ஏக்கர் நில ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. இதில் குறிப்பாக ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்த்திற்கான நில ஒதுக்கீடு குறித்து, இத்திட்டத்தின் பிரதம ஆலோசகரான, டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியமைக்காக இந்திய அரசின் பாராட்டைப்பெற்ற திரு.ஸ்ரீதரன் அவர்கள் வலுவான ஆட்சேபனைகளை எழுப்பி, இந்தியத் திட்டக்குழுத் துணைத்தலைவர் திரு. மாண்டேக் சிங்க அலுவாலியா அவர்களுக்கு நேர்முகக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுப்பிய ஆட்சேபனைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் இந்த மோசடி நிறுவனத்தின் மீது மேற்கொள்ளப்படவில்லை. மாறாக ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தின் பிரதம ஆலோசகர் பொப்பிலிருந்து எவ்வித நியாயமான வழிமுறைகளுக்கும் பொருந்தாத வகையில் அவர் விடுவிக்கப்பட்டதுடன், இத்திட்டம் தொடர்பாக, அவர் தலைவராக உள்ள டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட ரூபாய் 196 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் இரத்து செய்யப்பட்டுவிட்டது. அந்த அளவிற்கு இந்த மோசடி நிறுவனம் சர்வதேச அளவிலும், மத்திய மற்றும் மாநில அரசுகளிலும் தனது செல்வாக்கைச் செலுத்தியுள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடிய கசப்பான உண்மையாகும்.

இதெல்லாம் சரி. இந்த மோசடியைத் தணிக்கை செய்த நிறுவனம் கண்டுபிடிக்கவில்லையா ? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஆனால், சத்யம் நிறுவனத்தின் கணக்குகளைத் தணிக்கை செய்யும் நிறுவனமான “பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்’’ என்ற ஒரு பன்னாட்டு நிறுவனமாகும் உலகமயமாக்கல் பின்னணியில், சேவைத்துறையில் ஊடுருவ அனுமதிக்கப்பட்ட பன்னாட்டுத் தனியார் நிறுவனங்களில் ஒன்றுதான் இத்தணிக்கை நிறுவனம். ஏற்கனவே “குளோபல் டிரஸ்ட் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக அவ்வங்கியின் தணிக்கைப் பணியை மேற்கொண்ட இந்நிறுவனத்தின் மீது இந்திய சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் சங்கம்’’ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணை முடியும் வரை இந்திய நாட்டின் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கி எதுவும், இத்தணிக்கை நிறுவனத்திற்கு தங்கள் வங்கியின் தணிக்கைப் பணியை ஒப்படைக்கக்கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி தாக்கீது அனுப்பியுள்ளது. அப்படிப்பட்ட “பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்’’ நிறுவனம்தான். சத்யம் நிறுவனத்தின் தணிக்கையை மேற்கொண்டு, இல்லாத வங்கி இருப்பை இருப்பதாகவும், வராத வட்டியை வரவாகவும், இலாபத்தை உயர்த்தியும், பொறுப்பைக் குறைத்தும் காட்டப்பட்ட வரவு-செலவை ஏற்றுக்கொண்டு, தணிக்கைச்சான்று அளித்துள்ளது.

மோசடி என்பது இலாப, நஷ்டக் கணக்குகளோடு மட்டும் நின்றுவிடவில்லை. சத்யம் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கையிலும் இருந்துள்ளது. சுமார் 40000 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றும் இந்நிறுவனத்தில் 53,000 ஊழியர்கள் பணியாற்றுவதாகக் குறிப்பிட்டு, உண்மையில் பணியில் இல்லாத13,000 ஊழியர்களுக்கு சம்பளம்குறிப்பிட்டு, உண்மையில் பணியில் இல்லாத13,000 ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதாகக் கணக்கெழுதி மாதம் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்குக் குறையாமல் நிறுவன உரிமையாளரால், பணம் கொள்ளையடிக்கப்பட்டு வந்துள்ளது. இதையும் பிரை°வாட்டர்ஹவு° கூப்பர் என்ற, இந்தியாவில் தணிக்கைத் துறையில் ஈடுபட்டுள்ள பன்னாட்டுத் தணிக்கை நிறுவனம் தணிக்கை அறிக்கையும் சுட்டிக்காட்டவில்லை.

ஆக, மொத்தத்தில் சத்யம் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் சம்பந்தமாக தற்போது வெளிவந்துள்ள விஷயங்கள் முழுமையானவை என்று கருதமுடியாது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணையில் மேலும் பல விவரங்கள் வெளிவரக்கூடும். அப்போதும்கூட மோசடியின் முழுப்பரிமானமும் அதற்குப் பின்னாலுள்ள காரணிகளும், முழுமையாக வெளிக்கொணரப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

தவிரவும், புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டது முதலே இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளில்கண்காணிப்பும் தாராளமயமாக்கல் என்பதன் பெயரால் பெருமளவு - ஏன் முற்றாகவே - விலக்கிக்க்கொள்ளப்பட்டதன் விளைவாக, இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகளும், அவர்கள் குவித்துவரும் அபரிமிதமான செல்வமும் பெரும் மர்மமாகவே இருக்கின்றன. ஏற்கனவே, வெளிவந்துள்ள ஹர்ஷத்மேத்தா, கேத்ன்பரnக், யூ.டி.ஐ., குளோபல் டிரஸ்ட் வங்கி போன்ற ஊழல்களின் வரிசையில் தற்போது சத்யம்.... என்றாலும், இவையெல்லாம்கூட கடலில் அமிழ்ந்துள்ள பனிமலையின், கடல் மட்டத்திற்குமேலே தெரியவந்துள்ள ஒரு சில முகடுகளே.

டைட்டானிக் போன்ற வலுவான கப்பல்களையே உடைத்து மூழ்க்ச் செய்யக்கூடிய வகையுள்ள இம்முகடுகளுக்குச் கீழேயுள்ள பனிமலைகள் பரவலாக, கண்ணுக்குத் தெரியாமல் உள்ளன.இத்தகைய நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தையே மூழ்கடிக்கக்கூடிய வகையில் செயல்படுகின்றன என்பது அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் அம்பலப்ப்ட்டுள்ளன. கோடிக்கணக்கான மக்களின் நலன்களை இப்படிப்பட்ட தனியார் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் முதலாளிகளின் நலன்களையே ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் முன்னிறுத்திச் செய்லபட்டுவருவது அவருவருப்பான உண்மையாகும்.மக்களைப் புறக்கணித்துவிட்டு தனிப்பட்ட முதலாளிகளைப் பாதுகாப்பது மட்டுமின்றி அவர்களை மேலும் கொழுக்கச்செய்வதற்கான நடவடிக்கைகளை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்காக அவர்கள் பல்வேறு சாகசங்களை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் இத்தனியார் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகளிடமிருந்து பெருந்தொகைகளை ஆதாயமாகப் பெற்று, பெருந்திரளான மக்களின் வாழ்வை, வளத்தை சூறையாடி, தங்களை வளப்படுத்திக்கொள்கிறார்கள்.

அன்பளிப்பு, மாமூல், இலஞ்சம், ஊழல் மோசடி, ஏமாற்று, பித்தலாட்டம், தகிடுதத்தம் என்று பல்வேறு பெயர்களின், தலைப்புகளில் அவ்வப்போது ஊடகங்களில் வெளிவரும் இத்தகைய பல்வேறு நடவடிக்கைகளைப் பற்றி அப்போதைக்குப் பரபரப்பாகப் பேசிவிட்டு, பின்னர் இவற்றை அடியோடு மறந்துவிடுவதென்பது வாலாயமான நடைமுறையாகிவருகிறது. நேரு காலத்து மந்த்ரா ஊழல், கெய்நீரான் ஊழல், இந்திரா காலத்து நகர்வாலா மோசடி, ராஜீவ் காலத்து போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் என அகில இந்திய அளவில் தொடங்கி, தமிழ்நாட்டின் பூச்சிமருந்து ஊழல், சுடுகாட்டுக்கொட்டகை ஊழல் என விரியும் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். இவை ஏதோ தனிப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் சார்ந்த விஷயங்கள் என்ற மலிவான புரிதல் பரவலாக மக்கள் மத்தியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், இலாபம், செல்வக்குவிப்பு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு பரவலான சமூகத்தின் நலன்களைக் காவுகொடுக்கும் சமூக அமைப்பான முதலாளித்துவ சமூக அமைப்பின் இயல்பான குணக்கேடுகளே இவற்றின் மூலகாரணம் என்பதை உணரவேண்டும் உணர்த்தவேண்டும். கொட்டு இல்லாமலே ஆடுகிறவன் உறுமிமேளம் கேட்டால் என்ன ஆவான் ? என்று கிராமங்களில் ஒரு சொல் சொல்வார்கள்.
அதே நிலைதான் இன்று முதலாளித்துவத்தின் கேடுகெட்ட நடவடிக்கைகளை, ஏகாதிபத்திய நிர்பந்தத்தால் உலக நாடுகள் மீது திணிக்கப்பட்டுள்ள உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை இன்று உலகம் முழுவதும் வி°தரித்து வருகின்றன. அதில் சத்யம் மட்டுமல்ல. இதைப்போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் மோசடிகளை முறியடிப்பது என்பது, இந்த முதலாளித்துவ சமூக அமைப்புக்குள் முழுவெற்றி அடையமுடியாது. எனவே, மக்களின் நலனைப் பாதுபாப்பதற்கான போராட்டம் என்பது இத்தகைய மோசடிகளை முறியடிப்பது, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பது என்பதோடு முடிவடையக்கூடியதல்ல, மாறாக, இவற்றிற்கு விளைநிலமாக இருக்கக்கூடிய முதலாளித்துவ சமூக அமைப்பை அதனைத் தாங்கிப் பிடிப்பதற்hக உருவாக்கி வைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை அடியோடு தகர்த்தெறிந்து, அவற்றின் அழிவிலிருந்து முகிழ்த்தெழக்கூடிய சோசலிஷ சமூக அமைப்பை கட்டியமைப்பதோடுதான் அது நிறைவடையும். அத்தகைய மாற்று சமூக அமைப்பிற்கான போராட்டத்திற்கு நம்மை உணர்வுபூர்வமாக அhப்பணித்துக்கொள்வோம்.

-இரா.முத்துசுந்தரம்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்.